ADDED : மார் 23, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் சட்டசபைதேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் படைவீரர்கள் பலர் பங்கேற்றனர். அவர்கள் தேர்தலில் பணியாற்ற வேண்டியவை குறித்து எஸ்.பி., விளக்கினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலர் அருள்மொழி, கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், ரகுபதி, டி.எஸ்.பி., ரகுபதி, கந்தன், சரவணகுமார் (பயிற்சி), இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா ஆகியோர்கள் பங்கேற்றனர்.
