/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 04, 2024 06:14 AM
புதுச்சத்திரம் : சம்பா சாகுபடிக்கு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் வரும், 15 ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டுமென, வேளாண்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் 2024 - 25 ம் ஆண்டு சம்பா சாகுபடிக்கு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் வரும் 15 ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கியில் கடன் பெறும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியிலேயே பயிர் காப்பீடு செய்யப்படும்.
கூட்டுறவு வங்கியில் கடன்பெறாத விவசாயிகள், ஆதார் கார்டு, சிட்டா, அடங்கல், பேங்க் பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச்சென்று, ஏக்கருக்கு 550 ரூபாய் வீதம், இ. சேவை மையம், கூட்டு றவு வங்கி உள்ளிட்ட ஏதாவது ஒன்றில், பயிர் காப்பீடு செலுத்தி பயன்பெறலாம் என வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.