ADDED : மார் 23, 2026 05:53 AM

காட்டுமன்னார்கோவில்: ஆவணங்கள் இல்லை என கூறி தேர்தல் பிரசார துண்டு பிரசுரங்களை நாம் தமிழ் கட்சி வேட்பாளரிடம் இருந்து, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் ஏரிக்கரை, கந்தகுமாரனில் வேளாண்துறை உதவி அலுவலர் உமாதேவி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர்.
அப்போது காட்டுமன்னார்கோவில் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் நாம் தமிழர் கட்சி கட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளர் பூந்தோட்டம் முருகையன் மகன் சிவஜோதி 52; தேர்தல் பிரசாரத்திற்கான துண்டு பிரசுரங்கள் இரண்டு கட்டுகளை எடுத்து சென்றார்.
காரில் இருந்த தேர்தல் பிரசார துண்டு பிரசாரத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை எனவும், நோட்டீசில் விளம்பர எண் போடவில்லை என கூறி இரண்டு கட்டு பிரசார துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை காட்டுமன்னார்கோவில் தொகுதி தேர்தல் அலுவலர்கள் துணை கலெக்டர் ராணி, தாசில்தார் பிரகாஷிடம் ஒப்படைத்தனர்.
