ADDED : ஜூன் 25, 2026 05:57 AM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: ஜூன் 25-: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் வளைவில் சின்னநற்குணம், அம்மன்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன.
இந்த சாலையின் வளைவில் வாகனங்கள் வளைந்து செல்லும்போது எதிரே வரும் வாகனங்களில் மோதி தொடர் விபத்திற்குள்ளாகின்றனர்.
இந்த சாலையில் விபத்துகளை தடுக்க, எச்சரிக்கை பலகை, கருப்பு வெள்ளை கோடு, சிக்னல், மின் விளக்கு உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
