/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகர வீதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா
/
நகர வீதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா
நகர வீதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா
நகர வீதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா
ADDED : மார் 20, 2024 05:15 AM

சிதம்பரம், : சிதம்பரம் நகர வீதிகளில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தர வேண்டும் என, அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில், சிதம்பரத்தில் நேற்று அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சப் கலெக்டர் ராஷ்மிராணி தலைமை தாங்கினார். ஏ.எஸ்.பி., ரகுபதி, சப் கலெக்டர் நேரடி உதவியாளர் புகழேந்தி, முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர்கள், சுரேஷ்குமார், கல்பனா உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்த, முக்கிய வீதிகளில் இடம் ஒதுக்க வேண்டும், கூட்டத்திற்கு அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்தால், அனுமதி உடனடியாக வழங்க வேண்டும் என, அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
தொடர்ந்து ஏ.எஸ்.பி., ரகுபதி பேசுகையில், பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஆகியவற்றிற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்றிக் கொள்ள வேண்டும், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

