அதிகாரிகள் 'ஈகோ' பிரச்னையால் பாதியில் நின்ற வாய்க்கால் பணி
அதிகாரிகள் 'ஈகோ' பிரச்னையால் பாதியில் நின்ற வாய்க்கால் பணி
ADDED : பிப் 23, 2026 03:21 AM

நெல்லிக்குப்பம்: நகராட்சி மற்றும் கவுன்சிலரின் ஈகோ பிரச்னையால் வாய்க்கால் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவில் இருந்து ரத்தினம் தெரு செல்ல குறுக்குத் தெரு உள்ளது. அவ்வழியில் ஒரு வீட்டின் கழிவுநீர் செல்ல இருந்த பழமையான கால்வாய் சேதமானது.
அதை சரி செய்யும் பணி 10 நாட்களுக்கு முன் துவங்கியது. ஒரு வீட்டின் கழிவுநீர் மட்டுமே செல்வதால் சிமண்ட் குழாய் புதைக்க அதிகாரிகள் கூறினர். அதற்காக சிமண்ட் குழாய் வந்தது.
ஆனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதால் சிமண்ட் குழாய் உடைந்துவிடும் என்பதால், சிறிய பாலம் கட்ட வேண்டும் என கூறி கவுன்சிலர் சத்தியா பணியை தடுத்து நிறுத்தினார். சிமெண்ட் குழாய் போதுமானது.
பெரிய வாகனங்கள் செல்ல போவதில்லை. சிறிய பாலம் கட்ட செலவு அதிகமாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இரு தரப்பின் ஈகோ பிரச்னையால் தோண்டிய பள்ளம் மூடப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
