தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 100 நாட்களில் அடிப்படை வசதிகள்: வேட்பாளர் முருகுமாறன் வாக்குறுதி

 100 நாட்களில் அடிப்படை வசதிகள்: வேட்பாளர் முருகுமாறன் வாக்குறுதி

 100 நாட்களில் அடிப்படை வசதிகள்: வேட்பாளர் முருகுமாறன் வாக்குறுதி


ADDED : ஏப் 13, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநத்தம்: நுாறு நாட்களில் தொகுதி முழுவதும் அடிப்படை வசதி குறைகளுக்கு தீர்வு காணப்படும் என அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.

திட்டக்குடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் மங்களூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஆலத்துார், சித்துார், கீழக்கல்ப்பூண்டி உட்பட 14 ஊராட்சிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார். அவருக்கு, கிராமங்கள் தோறும் கட்சியினர் மற்றும் பொது மக்கள் வரவேற்பு அளித்தனர். ஓட்டு சேகரிப்பின் போது அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் பேசியதாவது; திட்டக்குடி தொகுதியில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இன்றி பின்தங்கியுள்ளது. தேர்தலில் நான் வெற்றி பெற்றதும், அடுத்த 100 நாட்களில் தொகுதி முழுவதும் உள்ள கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகளில் உள்ள குறைகள் முழுவதும் தீர்க்கப்படும் என்றார். ஓட்டு சேகரிப்பின்போது, அ.தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், அருள், முத்தமிழ்ச்செல்வன், பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us