/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள்... 10,354 பேர்: கடலுார் மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு
/
இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள்... 10,354 பேர்: கடலுார் மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு
இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள்... 10,354 பேர்: கடலுார் மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு
இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள்... 10,354 பேர்: கடலுார் மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு
ADDED : நவ 08, 2025 01:55 AM

கடலுார்: இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வில், 10,354 பேர் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுதும் இரண்டாம் நிலை காவலர் நேரடி தேர்வு, சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 3,644 பணியிடங்களை நிரப்பிட எழுத்து தேர்வு வரும், 9ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்வில் கடலுார் மாவட்டத்தில், 7610 ஆண்களும், 2,744 பெண்களும் என, மொத்தம் 10,354 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம், சி.கே.மேல்நிலைப்பள்ளி, ஜட்ஜ் பங்களா ரோடு, கிருஷ்ணசாமி மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, ஏ.ஆர்.எல்.எம்., வித்யாலயம் வில்வநகர், அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, எ.பி.எஸ் அவென்யூ, கெடிலம் புறவழி சாலை, திருப்பாதிரிபுலியூர், கிருஷ்ணசாமி மெமோரியல் பாலிடெக்னிக் கல்லுாரி, டி. குமாரபுரம், கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆப் எக்சலன்ஸ், மருதாடு ரோடு எஸ். குமாரபுரம், புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம் ஆகிய 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், விழுப்புரம் சரக துணைத்தலைவர் உமா தலைமையில் கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தேர்வில் பங்கேற்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், ரகுபதி, டி.எஸ்.பி., க்கள் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேர்வு கூடத்திற்கு எந்தெந்த பொருட்களை அனுமதிப்பது, அனுமதிக்கக்கூடாது என்பன குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
இந்த தேர்வில் பங்கேற்கும், தேர்வர்கள் கண்டிப்பாக ஹால் டிக்கெட் கொண்டுவர வேண்டும்; தேர்வர்கள் அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்; தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா, கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்; இது தவிர புத்தகம், கைப்பை, மொபைல் போன், புளுடூத் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை கண்டிப்பாக தேர்வு மையங்களுக்குள் கொண்டு வரக்கூடாது; என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

