UPDATED : ஜூலை 30, 2026 03:19 PM
ADDED : ஜூலை 30, 2026 02:50 PM

அ நிறம் | அளவு
பெண்ணாடம்:ஆடி மாதத்தையொட்டி, பெண்ணாடம் கிழக்கு மெயின்ரோடு சிவ சுப்ரமணியர் கோவிலில் நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி, காலை 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணியர் சுவாமிக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலை 6:30 மணிக்கு பெண்கள் திருவிளக்கு பூஜையும், ரவு 7:15 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
