ADDED : ஆக 23, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாக சிறைக் காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறைக் காவலர்கள் நேற்று முன்தினம் கைதிகள் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, சிதம்பரத்தை சேர்ந்த விசாரணை கைதி, மீனாட்சி சுந்தரம் மகன் அரவிந்த்,29; என்பவர் 1 கிராம் கஞ்சா பதுக்கியது தெரிந்தது. இதுகுறித்து சிறை அலுவலர் விஷாந்த் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் அரவிந்த் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
