கடலுார் மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
கடலுார் மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
ADDED : மார் 07, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலுார், மத்திய சிறையில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாக சிறப்பு சோதனைக்குழுவிற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கைதிகள் அறைகளில் சிறப்பு சோதனைக் குழுவினர், நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, தொகுதி 2ல், விழுப்புரத்தை சேர்ந்த தண்டனை கைதி சரவணன் (எ) லாலி கார்த்திக் அடைக்கப்பட்டுள்ள அறையில், 3 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் கடலுார், முதுநகர் போலீசார், சரவணன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
