/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் கஞ்சா விற்றவர் கைது: ஒரு கிலோ பறிமுதல்
/
புவனகிரியில் கஞ்சா விற்றவர் கைது: ஒரு கிலோ பறிமுதல்
புவனகிரியில் கஞ்சா விற்றவர் கைது: ஒரு கிலோ பறிமுதல்
புவனகிரியில் கஞ்சா விற்றவர் கைது: ஒரு கிலோ பறிமுதல்
ADDED : பிப் 17, 2025 01:50 AM
புவனகிரி,: புவனகிரியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புவனகிரியில் கஞ்சா விற்பனை செய்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் தலைமையிலான போலீசார் நேற்று மாலை முத்தாட்சி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கடை அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர், 1 கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கீரப்பாளையம் அடுத்த இடையன்பால்சொரி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் வெங்கடாச்சலம்,27; ஐ.டி.ஐ., படித்துவிட்டு சென்னையில் பைக் கம்பெனியில் வேலை செய்யும் போது கஞ்சா போதைக்கு அடிமையாகி, விற்பனையிலும் ஈடுபட்டது தெரியவந்தது. ஆந்திரா சென்று கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார்.
போலீசார் வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.