/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு கல்லுாரியில் ரூ. 60 லட்சத்தில் உணவக கட்டடம்
/
கடலுார் அரசு கல்லுாரியில் ரூ. 60 லட்சத்தில் உணவக கட்டடம்
கடலுார் அரசு கல்லுாரியில் ரூ. 60 லட்சத்தில் உணவக கட்டடம்
கடலுார் அரசு கல்லுாரியில் ரூ. 60 லட்சத்தில் உணவக கட்டடம்
ADDED : ஜன 05, 2025 07:51 AM

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில், 60லட்ச ரூபாய் மதிப்பில் உணவக கட்டடம் கட்டும் பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 60லட்ச ரூபாய் மதிப்பில் உணவக கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை, அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர கமிஷனர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, உதவி செயற்பொளியார் சிவசங்கரநாயகி, பேராசிரியர்கள் சாந்தி ராமகிருஷ்ணன், நிர்மல்குமார், இளவரசன், சீனிவாசன், மனோகரன், கவுன்சிலர் மகேஸ்வரி விஜயகுமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், உதவிபொறியாளர்கள் சுரேஷ், வினோத்குமார் மற்றும் கலையரசன், சுகுமார், தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.