ADDED : ஆக 23, 2026 08:34 PM
சிதம்பரம்: சிதம்பரம் அருகே டிராக்டர் மீது, கார் மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரைக்காலில் இருந்து சென்னைக்கு நேற்று காலை கார் சென்று கொண்டிருந்தது. காரைக்காலைச் சேர்ந்த சந்தோஷ்குமார்,32; காரை ஓட்டினார்.
சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை அருகில் கார் வந்த போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹாலோ பிளாக் கல் ஏற்றி வந்த டிராக்டரின் பின்னால் மோதியது. இதில், கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் டிரைவர் சந்தோஷ்குமார், அவருடன் வந்த அவரது தாய் சித்ரா ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து சிதம்பரம், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். வல்லம்படுகை அருகில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பேத பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
