தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கார்கள் மோதல்: ஒருவர் பலி

கார்கள் மோதல்: ஒருவர் பலி

கார்கள் மோதல்: ஒருவர் பலி


ADDED : ஏப் 17, 2025 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம் : வடலுார் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர்.

கடலுார் அடுத்த தியாகவல்லியை சேர்ந்தவர் வீரமணி. இவர், வடலுாரில் இருந்து நெய்வேலி நோக்கி நேற்று முன்தினம் வோக்ஸ்வேகன் காரை ஓட்டிச் சென்றார். வீணங்கேனி பாலம் அருகில் கார் வந்தபோது, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மற்றும் எதிரே வந்த ஸ்விப்ட் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ஸ்விட்ப் காரில் பயணித்த விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தை சேர்ந்த ராஜ்குமார்,34; அவரது மனைவி தனலட்சுமி, மகன் கோகுல் மற்றும் ராஜ்குமார் சகோதரி பவாணி, பைக்கில் வந்த அஜய்ராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இவர்கள், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டாக்டர் பரிசோதித்ததில், ராஜ்குமார் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இவரது குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us