தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 4 சவரன் செயின் திருடிய கார் டிரைவர் கைது

4 சவரன் செயின் திருடிய கார் டிரைவர் கைது

4 சவரன் செயின் திருடிய கார் டிரைவர் கைது


ADDED : ஏப் 05, 2025 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்; காரில் சென்றவர்களிடம் 4 சவரன் செயினை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அடுத்த அம்மாப்பேட்டை ராஜாநகரை சேர்ந்தவர் ராஜசேகரன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த மாதம் 8ம் தேதி, தனது மனைவி புவனாதேவியுடன் உறவினர் திருமணத்துக்காக காரைக்காலுக்கு காரில் சென்றார்.

காரை சிதம்பரம் மீனவர் காலனி கணேசன், 48; ஓட்டினார். அப்போது, காரின் டிக்கியில் பையில் வைத்திருந்த 4 சவரன் செயின் காணாததை கண்டு ராஜசேகரன் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் அண்ணாமலை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப் பதிந்து, சந்தேகத்தின் பேரில், கார் டிரைவர் கணேசனை பிடித்து நேற்று விசாரணை நடத்தினர்.

இதில், செயின் திருடியதை ஒப்புக் கொண்டார். உடன், அவரை போலீசார் கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us