ADDED : ஏப் 02, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: புவனகிரி தாலுக்கா, வடக்கு தலைக்குளம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ், 29. சோனாஞ்சாவடியில் தனியார் கெமிக்கல் கம்பெனியில் கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல கம்பெனி ஊழியர்களை காரில் ஏற்றிக்கொண்டு, குள்ளஞ்சாவடி நோக்கி சென்றார். அப்போது சாலையில் தகராறில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன், பாரதி, ஆகாஷ் காரின் குறுக்கே விழுந்தனர்.
இதையடுத்து அவர்கள் தேவராஜை தாக்கி, காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
