தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 15, 2025 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: முன்விரோத தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

நடுவீரப்பட்டு, அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ராஜ்குமார்,20; ராணிப்பேட்டையில் நடந்த தெருக்கூத்துக்கு சென்றார்.

அப்போது அவருக்கும், நடுவீரப்பட்டு கவுதம், பிரசாந்த், சந்தோஷ்குமார், குறிஞ்சிப்பாடி ராமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் கவுதம் மற்றும் அவரது தரப்பினர் சேர்ந்து ராஜ்குமார் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது அண்ணன் ராஜபாண்டியனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கவுதம் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us