/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
/
பெண் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 29, 2024 04:11 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் இரு தரப்பை சேர்ந்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த வெ.பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன்,44. இவரது மனைவியை அதேப் பகுதியை சேர்ந்த விஜயகுமார்,23; சந்திரசேகர்,24; ஆகியோர் திட்டி தாக்கினர். தகவலறிந்த தனஞ்செழியன் சம்பவ இடத்திற்கு சென்று, விஜயகுமார், சந்திரசேகரை தாக்கினார்.
காயமடைந்த விஜயகுமார், ரேவதி ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து இரு தரப்பும் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், இரு தரப்பையும் சேர்ந்த நால்வர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.