ADDED : செப் 29, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் நகரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாமோதரன் மகன் ஜெனித், 22; ரஜினி மகன் ராஜேஷ், 22; வைத்தியநாதன் மகன் பரணிதரன், 21; சிவபிரகாசம் மகன் ரஞ்சித், 22. இவர்கள் நால்வரும், நேற்று முன்தினம் குப்பநத்தம் மாரியம்மன் கோவில் அருகே கபடி போட்டி நடத்துவதாக, விருத்தாசலம் நகரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தனர்.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் ஜெனித் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.