/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி பேனர் வி.சி.,யினர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர் வி.சி.,யினர் மீது வழக்கு
ADDED : ஜன 29, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் அனுமதியின்றி பேனர் வைத்த வி.சி., கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருச்சியில் கடந்த 26ம் தேதி வி.சி., சார்பில் மாநாடு நடந்தது. இதனையொட்டி அக்கட்சியினர் புவனகிரி பாலக்கரையில் பேனர் வைத்தனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசில் அனுமதி வாங்கவில்லை என, அப்பகுதி வி.ஏ.ஓ., வத்சலா புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அக்கட்சியின் நகர செயலர் மாறன், தொகுதி செயலாளர் சுதாகர் ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.