ADDED : செப் 23, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, பொன்னேரி மெயின்ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் ராஜசேகர் மனைவி வனிதா, 38, என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.