/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு
/
மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு
ADDED : அக் 19, 2024 04:54 AM
விருத்தாசலம் : மனைவியை துன்புறுத்திய கணவர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடியை சேர்ந்தவர் கந்தவேல் மகன் சிலம்பரசன், 38. இவரது மனைவி ஜெயமாலா, 37. இருவருக்கும் திருமணமாகி 7 வயதில் மகன், 7 மாத மகள் உள்ளார். இரண்டாவது குழந்தை வயிற்றில் இருந்தபோதே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் ஜெயமாலா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் சிலம்பரசனுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஜெயமாலாவை சிம்லபரசன் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.