/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : மார் 17, 2025 06:25 AM
நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அருகே மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அங்கம்மாள், 65; அதே பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன். இருவரது குடும்பத்தினருக்குமிடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் அங்கம்மாள் வீடுகட்ட மினி சரக்கு வேனில் பொருட்களை ஏற்றி வந்தார். காசிராஜன் மகன்கள் சிவராஜன், சிவகண்டன் ஆகிய இருவரும் பொருட்களை இறக்க விடாமல் தடுத்து, அங்கம்மாளை தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சிவராஜன், சிவகண்டன் ஆகிய இருவர் மீதும் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.