தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்குள் மோதல் 20 பேர் மீது வழக்கு

 மாணவர்களுக்குள் மோதல் 20 பேர் மீது வழக்கு

 மாணவர்களுக்குள் மோதல் 20 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 13, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, பிளஸ்2 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், அரசடிக்குப்பத்தை சேர்ந்த அதே வகுப்பில் படிக்கும், மாணவருக்கும் இடையே நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின் போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அரசடிக்குப்பத்தை சேர்ந்த மாணவர் உட்பட சிலர், வெள்ளக்கரை பகுதி மாணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று, அவரது பெற்றோரை மிரட்டியுள்ளனர். மேலும், நேற்று பள்ளியில் வெள்ளக்கரை மாணவரை, அரசடிக்குப்பம் மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் சேர்ந்து திட்டி தாக்கியுள்ளனர்.

இதில் வெள்ளக்கரை மாணவர் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பா.ம.க.,வினர் நேற்று மாலை நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு கூடினர். அவர்களிடம் நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருதரப்பு புகாரின் பேரில் வழக்கு பதியாமல், ஒரு தரப்பின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது ஏன் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இருதரப்பு புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதையடுத்து, இரு தரப்பு புகாரின்பேரில், 20 க்கும் மேற்பட்டவர்கள் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us