/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 24, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி; வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் விக்ரம், 23; இவரது சித்தப்பா சண்முகவேல் மகள் நிச்சயதார்த்த விழா சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் விக்ரம் குடும்பத்தினர் செல்லாததால், சண்முகவேல் மற்றும் அவரது தரப்பினர் ஆத்திரமடைந்து விக்ரமை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், சண்முகவேல், மணிமேகலை, சந்தியா ஆகியோர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

