ADDED : ஏப் 16, 2025 08:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தாமரைக்குளம் தெரு புற்றுமாரியம்மன் கோவில் பின்னால் பணம் வைத்து சூதாடிய, அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், 56; வீரமணிகண்டன்,32; பாலமுருகன், 32; வெற்றிராஜா,36; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.
இவர்களிடம் இருந்து 52 புள்ளித்தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.