/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு
ADDED : செப் 26, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சந்திரவேல், 23. 16 வயது சிறுமியை காதலித்து, நெருங்கி பழகி உள்ளார். அதில், சிறுமி கர்ப்பமான நிலையில், இருவருக்கும் உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தற்போது சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார். தகவலறிந்த விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் புகார் பெற்று, சந்திரவேல் மற்றும் உறவினர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.