/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : செப் 25, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
அரியலுார் மாவட்டம், கோவில் வாழ்க்கை பகுதியை சேர்ந்தவர் சரவணன், 41; இவரது மனைவி கயல்விழி, 37; சரவணன் வேறொரு பெண்ணிடம் வடலுாரில் வசிப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரிடம் கயல்விழி தட்டிக் கேட்டார்.
ஆத்திரமடைந்த சரவணன், கயல்விழியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த கயல்விழி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் சரவணன் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.