/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய சிறையில் போன், கஞ்சா பதுக்கிய கைதிகள் மீது வழக்கு
/
மத்திய சிறையில் போன், கஞ்சா பதுக்கிய கைதிகள் மீது வழக்கு
மத்திய சிறையில் போன், கஞ்சா பதுக்கிய கைதிகள் மீது வழக்கு
மத்திய சிறையில் போன், கஞ்சா பதுக்கிய கைதிகள் மீது வழக்கு
ADDED : நவ 11, 2024 05:39 AM
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் மொபைல் போன் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இரண்டு கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கடலுார், கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு, சிறை அலுவலர் ரவி தலைமையிலான சிறப்பு சோதனை குழுவினர், சிறையின் தொகுதி 16ல் உள்ள அறை எண் 5ல் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு ஒரு மொபைல் போன், பேட்டரி, சிம்கார்டு, சார்ஜர் கேபிள் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மொபைல் போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அந்த அறையில் தண்டனை கைதிகளாக உள்ள சென்னை எழும்பூரை சேர்ந்த நாகராஜ் என்கிற பாம்பு, 35; மற்றும் புவனகிரியை சேர்ந்த மன்சூர் அலி, 40; ஆகியோர் மொபைல் போன் உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், நாகராஜ் மற்றும், மன்சூர் அலி மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.