/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு
/
வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு
ADDED : செப் 13, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வடலுார் அடுத்த அரங்கமங்கலம் கிராமத் தில் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது.
இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் (எ) குமார், 47; என்பவர் நேற்று முன்தினம் திடீரென புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.
பணியில் இருந்த வி.ஏ.ஓ., சந்திரவதனன், 45; என்பவரையும் மிரட்டினார். அங்கு வந்த ராமலிங்கம், 65; இவரது மகன் மோகன்தாஸ், 27; ஆகியோரை முன்விரோதம் காரணமாக தாக்கினார்.
புகாரின் பேரில், வடலுார் போலீசார், மகேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.