/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூலை 10, 2025 07:15 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே சிறுமியை கட்டாய திருமணம் செய்து, கர்ப்பிணியாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் வள்ளலார் காலணியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பரதன்,23; கூலித் தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை காதலித்து, இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
இதில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியான நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிந்தது.
இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய பரதன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.