தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

 பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

 பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 05, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு பூவாணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி, 55; இவரது மகள் நிர்மலா 25; அதே பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கும் லிங்கமூர்த்தி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடராஜன் குடிபோதையில் நிர்மலாவை ஆபாசமாக திட்டி, இரும்பு பைப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் காயமடைந்த நிர்மலா குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் நடராஜன் மீது, குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us