தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குழந்தை திருமணங்கள் மூவர் மீது வழக்கு பதிவு

 குழந்தை திருமணங்கள் மூவர் மீது வழக்கு பதிவு

 குழந்தை திருமணங்கள் மூவர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூன் 07, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: சிறுமிகளை திருமணம் செய்து குடும்பம் நடத்திய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி ஒருவர், வேலைக்கு சென்று வந்தபோது சிறுவன் ஒருவர் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்தார். சிறுமியுடன் தனிக்குடித்தனம் நடத்தியுள்ளார். விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

இதேபோல் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த மேலும் இரு சிறுமிகளும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவது தெரிந்தது. தகவலறிந்த விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி, சிறுமிகளை திருமணம் செய்த மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us