/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
த.வெ.க.,வினர் 380 பேர் மீது வழக்குப் பதிவு
/
த.வெ.க.,வினர் 380 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : மார் 17, 2025 05:56 AM
கடலுார் : கடலுாரில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக த.வெ.க.,வினர் 380 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார், மஞ்சக்குப்பத்தில் த.வெ.க., மாவட்ட செயலாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடந்தது.
பாரதி சாலையில் இருந்து கூட்டம் நடந்த திருமண மண்டபம் வரை அனுமதியின்றி ஊர்வலமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மாவட்ட செயலாளர் ராஜ்குமார், உட்பட 280 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இதே போன்று மாவட்ட செயலாளர் ராஜ்குமாருக்கு, அண்ணாபாலம் சிக்னல் அருகில் அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக வரவேற்பு அளித்ததாக மாநகர பகுதி செயலாளர் சாரதி உட்பட 100 பேர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.