ADDED : மார் 20, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார : கடலுாரில் கார் ஷோரூமில் லாக்கரை உடைத்து ரூ. 93 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார் செல்லங்குப்பம் இம்பிரியல் சாலையில் கார் ஷோரூம் உள்ளது. கடந்த 16ம் தேதி காலை ஷோரூமை திறந்த போது, மேனேஜர் அறை திறந்து கிடந்தது, லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.93 ஆயிரத்து 321 பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்து ஷோரூம் மேலாளர் ஆதிமூலம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

