தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முந்திரி, பலா பழச்சாறு தொழிற்சாலை மோகன் எம்.எல்.ஏ., கோரிக்கை

 முந்திரி, பலா பழச்சாறு தொழிற்சாலை மோகன் எம்.எல்.ஏ., கோரிக்கை

 முந்திரி, பலா பழச்சாறு தொழிற்சாலை மோகன் எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : ஜூன் 21, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: முந்திரிக்கு ஏற்றுமதி மையம் மற்றும் முந்திரி, பலா பழச்சாறு தொழிற்சாலைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பண்ருட்டி எம்.எல்.ஏ., மோகன் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பேசினார்.

அவர் பேசியதாவது:

அன்னிய செலாவணி ஈட்டித்தரும் பண்ருட்டி முந்திரிக்கு ஒரு ஏற்றுமதி மையம் ஏற்படுத்தி தரவேண்டும். முந்திரி பழத்தையும், பலாப்பழத்தையும் பயன்படுத்தி பழச்சாறு, கேக், இதர இனிப்பு வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக்கிட வேண்டும். தொகுதியில் மகளிருக்கு தனி கல்லுாரி உருவாக்கிட வேண்டும்.

தொகுதியில், தடைசெய்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூ ட வேண்டும். கோரையாறு முதல் டி.எடையார் வரை, 6 கி.மீ., மலட்டாற்றில் கலக்கிறது.

இங்கு கோரையாறில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். கோரையாற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் அளவிற்கு ெஷட்டர் அமைத்திட வேண்டும்.

கோரையாறு - டி.எடையார் வரை 5 கி.மீ. துாரத்திற்கு வாய்க்கால் வெட்ட வேண்டும். டி.எடையாறில் ஒரு தடுப்பணைகட்ட வேண்டும்.

வீரமடை பகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, கோரையாறு வழியாக 5ஆயிரம் கனஅடி நீர் கொண்டு வந்தால், 30 ஏரிகளும், விவசாயிகள் பயன்பெறுவர். நெல்லிக்குப்பத்தை, தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us