/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு பா.ம.க., வலியுறுத்தல்
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு பா.ம.க., வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2024 06:02 AM

நெய்வேலி : தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, நெய்வேலியில் நடந்த பா.ம.க., கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
நெய்வேலியில், என்.எல்.சி., பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு, வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வைத்தியநாதன், வேங்கைசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், சக்திவேல், ஐயப்பன், அறிவழகன், சதாசிவம், மூர்த்தி, பிரகாஷ், வேங்கடத்தான், அய்யனார் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் வரவேற்றார்.
கூட்டத்தில், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 10.5 சதவிகித வன்னியர் உள்ஒதுக்கீடூ வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்த ராமதாசுக்கு நன்றி தெரிவிப்பது, சிதம்பரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெறும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கருத்தரங்கில் வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில், சமூக நீதிக்கான கருத்தாளர்களை பங்கேற்க செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

