/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
/
மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
மாநகராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
ADDED : நவ 09, 2024 04:44 AM

கடலுார் : கடலுாரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அடைத்து வைத்தனர்.
கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளிலும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகிறது.
இந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு, காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தங்களுக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும்.
பிடிக்கப்படும் கால்நடைகள் எக்காரணம் கொண்டும் திரும்பி வழங்கப்பட மாட்டாது.
கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், கால்நடைகளுக்கு உரிமைக் கோரி வருபவர்கள் மீது அபராதம் அல்லது சிறைதண்டனை விதிக்க காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகள் வளர்க்கும் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரித்து மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கடலுார் மஞ்சக்குப்பம் சாலையில் சுற்றித்திரிந்த 7 மாடுகளை, நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். இந்த மாடுகளை பாபு கலையரங்கத்தில் அடைத்து வைத்தனர். மாடுகளுக்கு உரிமைக்கோரி வருபர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.