ADDED : மார் 06, 2024 02:23 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி 28 வது வார்டு சத்தியமூர்த்தி தெருவில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை பணியை சேர்மன் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பண்ருட்டி நகராட்சி 28 வது வார்டு சத்தியமூர்த்தி தெருவில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது.
இப்பணியை நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் துணை சேர்மன் சிவா, மாவட்ட பிரதிநிதி பிரபு, கவுன்சிலர்கள் வசந்திரமேஷ், சாந்திசெந்தில், உதவி பொறியாளர் கார்த்திகேயன், வட்ட பிரதிநிதி பிரபு, இளைஞரணி துணை அமைப்பாளர் பலாசந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
