/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் குடிநீர் பைப் செல்லும் பாலத்தில் சிமென்ட் கட்டை சேதம்
/
கடலுாரில் குடிநீர் பைப் செல்லும் பாலத்தில் சிமென்ட் கட்டை சேதம்
கடலுாரில் குடிநீர் பைப் செல்லும் பாலத்தில் சிமென்ட் கட்டை சேதம்
கடலுாரில் குடிநீர் பைப் செல்லும் பாலத்தில் சிமென்ட் கட்டை சேதம்
ADDED : டிச 23, 2024 05:16 AM

கடலுார் : கடலுார் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிய பாலத்தின் துாண்களில் தடுப்பு கட்டைகள் சேதமாகியுள்ளன.
'பெஞ்சல்' புயல் மற்றும் கனமழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் ஆறுகள், ஏரிகள், குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின. கடலுார் பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கங்கணாங்குப்பம், நாணமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.
கடலுார் கெடிலம் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அண்ணா பாலம் அருகில் மாநகராட்சி சார்பில் குடிநீர் பைப் செல்லும் வகையில் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறிய பாலம் அருகில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பாலத்தின் துாண்கள் சேதமடையாமல் இருக்க அதனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்பு கட்டைகள் வெள்ளத்தில் சேதமாகியுள்ளன. எனவே, சிமெண்ட் கட்டைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.