ADDED : செப் 23, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
வேப்பூர், செப். 24-
வேப்பூர் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு, தாசில்தார் ராமர் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் அன்னபூரணி முன்னிலை வகித்தனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு துணை இயக்குனர் ஷேம சுந்தரி, புள்ளியியல் துறை அலுவலர் நவீன்குமார் ஆகியோர், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
இதில், வேப்பூர் தாலுகாவைச் சேர்ந்த 53 வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.
