மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: உதவி எண்களை அறிவிப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: உதவி எண்களை அறிவிப்பு
UPDATED : ஜூலை 29, 2026 10:41 PM
ADDED : ஜூலை 29, 2026 10:34 PM
கடலுார்:மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு; மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக அறிவுறுத்தலின் படி, மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக மற்றும் முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலரான கலெக்டர், மாவட்டத்தில் 31 பொறுப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்ட கணக்கெடுப்பு பணி கடந்த 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பொது மக்கள் தங்களது சுய விவரங்களை se.census.gov.in வலைதளம் மூலம் 31ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். சுய கணக்கெடுப்பின் மூலம் பொதுமக்கள் தங்களை பற்றிய தரவுகளை விரைவாகவும் எளிதாகவும் பதிவேற்றலாம்.இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கீட்டாளர்களால் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்பட உள்ளது. இப்பணியில் 3,702 கணக்கீட்டாளர்கள், 582 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கணக்கீட்டாளர்கள் கேட்கும் 33 தரவுகளுக்கு, பொதுமக்கள் உரிய பதில்கள் அளித்திட வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு 1855 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் மாநில மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்திற்கோ அல்லது 04142-290298 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
