ADDED : பிப் 26, 2024 11:27 PM

மந்தாரக்குப்பம் : கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பத்தில், அடிக்கடி நடக்கும் விபத்துக்களை தடுக்க, சென்டர் மீடியன் உயர்த்தப்பட்டு வருகிறது.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதி வழியாக தினசரி பஸ், லாரி, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் இச்சாலைகளில் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை குறைக்கவும், போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்கவும், தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் கடந்து செல்லும்போது வாகன விபத்துக்களில் சிக்குவதை தவிர்க்க சென்டர் மீடியன் உயரத்தை அதிகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை உள்ள நான்கு வழிச்சாலையில் இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
