/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பகண்டை கிராமத்தில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு
/
பகண்டை கிராமத்தில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு
ADDED : டிச 09, 2024 06:17 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த பகண்டை கிராமத்தில் மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். நேற்று பண்ருட்டி அடுத்த பகண்டை கிராமத்தில் தென்பெண்ணை ஆறு, தோட்டக்கலை பயிர்கள் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இக்குழுவில் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் பொன்னுசாமி,மத்திய நிதி மற்றும் செலவினங்கள் துறை இயக்குநர் சோனமணி அஹோபம், மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் சரவணன், மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரி தனபாலன் குமார், மத்திய மின்சார துறை ஆணைய அதிகாரி ராகுல் பக்கேட்டி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.