/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.கே., வித்யா மந்திர் பள்ளியில் விழா
/
எஸ்.கே., வித்யா மந்திர் பள்ளியில் விழா
ADDED : ஆக 21, 2025 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் எஸ்.கே.,வித்யாமந்திர் பள்ளியில், மாணவர்களுக்கு தலைமை பதவி யேற்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் கவிதா கண்ணன் தலைமை தாங்கினார். கடலுார் கந்தசாமி நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என்.சி.சி., துறைத்தலைவர் நளினிசெல்வி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு துறை சார்ந்த அடையாளங்கள், அங்கீகாரம் வழங்கினார்.
மாணவர்களுக்கு தலைமை பண்புகளின் சிறப்புகளை தெரிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தில் தலைமை சார்ந்த பணிகளில் சிறப்பாக பணியாற்றுவதற்கும் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் சிறப்பாக செயலாற்ற இவ்விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.