UPDATED : ஆக 31, 2026 09:13 PM
ADDED : ஆக 31, 2026 09:12 PM
புவனகிரி:புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் மூன்று நாள் ஆராதனை விழா நேற்றுடன் நிறைவடைந்தது.
புவனகிரியில் ராகவேந்திரர் அவதரித்த இல்லம் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி 39ம் ஆண்டு ஆராதனை விழா கடந்த 29ம் தேதி காலை சுப்ரபாத சேவையுடன் துவங்கி வேத பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் பூர்வ ஆராதனையும், 30 ஆம் தேதி புண்ணிய ஆராதனையும், நேற்று 31ம் தேதி உத்தர ஆராதனையும் சுவேத நதி தீர்த்தத்துடன், மந்திராலயம் மரபு படி, அபிஷேக, அலங்காரம், தீப ஆராதனை நடந்தது.
ஏற்பாடுகளை ராகவேந்திரர் புனிதத்தொண்டு அறக்கட்டளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலார் டாக்டர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் ரமேஷ் ஆச்சாரியர் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.
மூன்று நாள் நடைபெற்ற ஆராதனை விழாவில் உள்நாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். :
