/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது
/
பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது
பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது
பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது
ADDED : ஜூலை 10, 2025 02:38 AM

சேத்தியாத்தோப்பு :  சேத்தியாத்தோப்பில் பட்ட பகலில் வட்டிக்கடையில் நகையை திருடிக்கொண்டு ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு தெற்கு சென்னிநத்தம் வள்ளலார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் முருகானந்தம்,45;   சந்தைத்தோப்பு அருகே உள்ள லலித் பேங்கர்ஸ் வட்டிக்கடையில் எழுத்தர்  வேலை செய்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல முருகானந்தம் பணியில் இருந்தபோது பகல் 12.00 மணியளவில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் பழைய நகை 4 கிராமில் செயின்  விலைக்கு கேட்டுள்ளார்.செயினை முருகானந்தம் காட்டியபோது திடிரென வாலிபர் செயினை பறித்துக்கொண்டு  ஓடியவரை வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் துரத்தித்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சிதம்பரம் அடுத்த கண்ணங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் ஸ்ரீதர்,25;  செயினை பறித்துச்சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில்  சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

