/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தார் சாலை பணி சேர்மன் துவக்கி வைப்பு
/
தார் சாலை பணி சேர்மன் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 27, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: கெங்கை கொண்டான் பேரூராட்சியில் தார் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.
கெங்கைகொண்டான் பேரூராட்சி எஸ்.பி.டி.எஸ்., நகரில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 35 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கவுன்சிலர் மாலா சதீஷ்குமார், சுரேஷ், ரவீந்திரன், பரணிதரன், அமீர்பாஷா, கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.