மக்கள் மனதில் மாற்றம்: அ.தி.மு.க., முருகுமாறன் பேச்சு
மக்கள் மனதில் மாற்றம்: அ.தி.மு.க., முருகுமாறன் பேச்சு
ADDED : ஏப் 01, 2026 06:54 PM

ராமநத்தம்: திட்டக்குடி தொகுதி 10 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் பேசினார்.
திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட, அ.தி.மு.க., மங்களூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சிறுபாக்கத்தில் நடந்தது. அ.தி.மு.க., மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் அய்யாசாமி முன்னிலை வகித்தனர்.
திட்டக்குடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் பேசகையில், 'திட்டக்குடி தொகுதி 10 ஆண்டுகளாக தி.மு.க., கைவசம் இருந்தது. அதில், கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க.,வின் கணேசன் அமைச்சராக இருந்தும் தொகுதியில் முன்னேற்றம் இல்லை. இதனால், மாற்றத்தை எதிர்பார்த்து உள்ள மக்களை சந்தித்து, தி.மு.க., ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி ஓட்டு சேகரிக்க வேண்டும்' என்றார்.
அ.தி.மு.க., வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அருள், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ் முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய நிர்வாகிகள் தங்கவேல், குமார், செந்தில், சந்திரபாபு, மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். அதே போன்று, திட்டக்குடி நகரத்திலும், நல்லுார் தெற்கு ஒன்றியத்திலும் அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடந்தது.
